விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 22.44 ஏக்கர் பரப்பளவில் ரூ. 120 கோடி மதிப்பில் அமையவுள்ள அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் ரூ.57 கோடி மதிப்பில் அமையவுள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை (மருத்துவம்) துரிதமாக மேற்கொள்கிறது.
2021 மே திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கொரோனா ஊரடங்கால் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் நுாற்றுக்கணக்கானோர் ஏப்ரல், மே மாதங்களில்சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். இதனால் கட்டுமானப்பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் பணியை இலக்கு நிர்ணயித்த காலத்துக்குள் முடிக்க பொதுப்பணித்துறை முயற்சி எடுத்தது. இதன் பயனாய் உள்ளூர் கட்டுமான தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர்களை கொண்டு கட்டுமான பணிகள் முடுக்கி விடப்பட்டன. தற்போது மளமளவென பணிகள் துரிதமாக நடக்கிறது.
நான்கு வழிச்சாலையில் இருந்து பார்த்தால் கட்டடங்களின் முகப்பு பகுதிகள் புதுப்பொலிவுடன் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக கண்ணாடிகள் பொருத்தப்பட்டு அழகுப்படுத்தும் பணிகள் நடக்கிறது.மாணவர் விடுதி தரைத்தளத்துடன் ஐந்து மாடி, மாணவியர் விடுதி தரைத்தளத்துடன் ஐந்து மாடி, ஏ டைப் குடியிருப்பு தரைத்தளத்துடன் 6 மாடி, சி மற்றும் டி டைப் குடியிருப்பு தரைத்தளத்துடன் 6 மாடி, டீன் குடியிருப்பு தரைத்தளத்துடன் முதல் மாடி, தரைத்தளத்துடன் வகுப்பறை 6 மாடி, கலையரங்கம் தரைத்தளத்துடன் முதல் மாடி, நிர்வாக அலுவலகம் தரைத்தளத்துடன் இரண்டு மாடி, கேன்டீன், வங்கி, தபால் அலுவலகம் தரைத்தளத்துடன் முதல் மாடி, விளையாட்டு பூங்கா உள்ளிட்ட சகல வசதிகளுடன் கட்டுமானப்பணியை 2021 அக்டோபரில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE