பொது செய்தி

தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், பருப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
விருதுநகர்: "வெங்காயம், பருப்பு வகைகளை மீண்டும் அத்தியாவசிய பொருட்களில் சேர்க்க வேண்டும்'' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.விருதுநகரில் பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. துாத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.விக்கிரமராஜா கூறியதாவது: விருதுநகருக்குள் தொலைதுார பஸ்கள் வந்து

விருதுநகர்: "வெங்காயம், பருப்பு வகைகளை மீண்டும் அத்தியாவசிய பொருட்களில் சேர்க்க வேண்டும்'' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

விருதுநகரில் பேரமைப்பின் ஆலோசனை கூட்டம் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. துாத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.விக்கிரமராஜா கூறியதாவது: விருதுநகருக்குள் தொலைதுார பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை தேவை. ஸ்மார்ட் சிட்டி பணிக்காக இடிக்கப்படும் கடைகளை எத்தனை மாதங்களில் கட்டி தரப்படும் என அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வேளாண் சட்டம் குறித்து நாமக்கல்லில் இன்று நடக்கும் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அத்தியாவசிய உணவு பொருளில் இருந்து உருளை, வெங்காயம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மீண்டும் இடம் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரிடர் உதவி தொகையை வணிகர்களுக்கும் வழங்க வேண்டும் என்றார்.நிர்வாகிகள் ராஜா, வெற்றிராஜன், வெங்கடேசன், கார்த்தீசன், சதக்கத்துல்லா, கோவிந்தராஜூலு பங்கேற்றனர்.வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X