விருதுநகர் : விருதுநகரில் லெமூரியா உலகத்தமிழ் ஆய்வு மையம் சார்பில் 'காமராஜர் ஆண்ட தமிழகம்' எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் ரவீந்திரா தலைமை வகித்தார். காமராஜர் அருங்காட்சியக நிறுவனர் கணேசன், ஓய்வு ஆசிரியர் ஆனந்த அபூர்வசாமி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சொக்கலிங்கம், மதுரை நாகரத்தினம் அங்காளம்மன் கல்லுாரி தாளாளர் மல்லிகை நாகரத்தினம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மோகன், சிவகாசி தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜராஜன் பங்கேற்றனர்.பல கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட 60 பேர் ஆய்வு களை பதிவு செய்தனர். அகில இந்திய நாடார் மக்கள் பேரவை பொது செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE