காஞ்சிபுரம்; சமூக நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும், 'கபீர் புரஸ்கார்' விருதுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள அறிக்கை:ஆண்டுதோறும், சமூக நல்லிணக்கத்திற்காக, சிறப்பாக செயலாற்றியோருக்கு, கபீர் புரஸ்கார் விருது, குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்படும். நடப்பாண்டு, அந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மதக் கலவரத்தின்போது, பிற மதத்தைச் சேர்ந்தோரின் உயிர் மற்றும் உடைமைகளை காப்பாற்றுதல், சமூக தொண்டு புரிதல், நல்லிணக்கத்திற்காக பாடுபடுவோர், இதற்கு தகுதியானவர்கள்.அதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், www.sdat.t.n.gov.in என்ற இணையதளத்திலும் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம், சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 74014 03481 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE