மாமல்லபுரம்; மாமல்லபுரம், பூதத்தாழ்வார் மண்டப வளாகம், உழவாரப் பணியில் துாய்மைப்படுத்தப்பட்டது.மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில், பூதத்தாழ்வார் அவதார பூந்தோட்ட வளாகம் உள்ளது.இப்பகுதி குருக்கத்தி மலரில், பூதத்தாழ்வார் அவதரித்ததாக நம்பிக்கை. இங்கு மண்டபம் அமைத்து, அவதார உற்சவத்தில், மண்டகப்படி உற்சவம் நடைபெறும்.இந்நிலையில், வளாகம்புதர் சூழ்ந்து, குளம் பாழடைந்து காணப்பட்டது. இதை பராமரிக்க கருதி, காஞ்சிபுரம், பகவத் அறக்கட்டளை, ஆன்மிக குழுவினர், நேற்று முன்தினம், உழவார பணி மேற்கொண்டனர்.குறு மரங்களில், நீண்டு அடர்ந்த கிளைகளை வெட்டி, புதரை அழித்து, குளத்து பாசி, குப்பையை நீக்கி, பூதத்தாழ்வார் வளாகத்தை துாய்மைப்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE