பொது செய்தி

தமிழ்நாடு

பல வழித்தடங்களில் ஓடிய '119பி' பஸ் மீண்டும் வருமா?

Added : டிச 08, 2020
Share
Advertisement
திருப்போரூர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட, '119பி' பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்பாக்கம் பணிமனையிலிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்படும், தடம் எண்: '119பி' பஸ், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரத்தை அடையும்.அங்கிருந்து கிளம்பி, திருப்போரூர், மானாமதி, முள்ளிப்பாக்கம் வந்து, இரவு அங்கேயே

திருப்போரூர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், பல வழித்தடங்களில் இயக்கப்பட்ட, '119பி' பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என, வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்பாக்கம் பணிமனையிலிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்படும், தடம் எண்: '119பி' பஸ், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரத்தை அடையும்.அங்கிருந்து கிளம்பி, திருப்போரூர், மானாமதி, முள்ளிப்பாக்கம் வந்து, இரவு அங்கேயே நிறுத்தப்படும்.பின் அதிகாலை, 4:00 மணிக்கு, முள்ளிப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு, மானாமதி, திருப்போரூர், சோழிங்கநல்லுார், கோயம்பேடு அடையும்.தொடர்ந்து, கோயம்பேடிலிருந்து புறப்பட்டு, ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர், மானாமதிவழியாக திருக்கழுக்குன்றம் செல்லும்.இந்த தடங்களில், பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட பஸ், கொரோனா ஊரடங்கு காரணமாக, திடீரென நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வு அளித்த பின்னும், மேற்கண்ட தடத்தில், 119பி பஸ் இயக்கப்படவில்லை.இதனால், கோயம்பேடு செல்லும் வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:திருப்போரூர், கேளம்பாக்கம் வழியாக, அதிகாலையில் கோயம்பேடு செல்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும், இதுதான் முதல் பஸ்சாக இருந்தது.தவிர, கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு இயக்கப்பட்ட, 119பி பஸ், மக்கள் செல்ல ஏதுவாக இருந்தது. தற்போது, பஸ் இயக்கப்படாததால் சிரமமாக இருக்கிறது. நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X