சின்னமனுார் : மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் நெல், வாழை, திராட்சை மற்றும் காய்கறி பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை , நிவர், புரெவி புயல் மழை காரணாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறைத்துறையினர் கிராமங்களில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்கையன்கோட்டையில் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் வயல்களில் கதிர்கள் சாய்ந்துள்ளன. அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசிற்கு தெரிவித்துள்ளோம் என சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில கிராமங்களில் சிறிய அளவில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE