பொது செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவில் தப்பியோர் உணவுக்கு வழியின்றி தவிப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் தப்பிய இருவரைஅதிகாரிகள் கண்டு கொள்ளாததால் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.ராஜமலை பெட்டிமுடியில் ஆக.,6ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 66 பேர் இறந்தனர்.மாயமான நான்கு பேரும்இறந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அங்கு வேலை செய்து வந்த 68 குடும்பங்களை கே.டி.எச்.பி., கம்பெனிபிறகு

மூணாறு : கேரளா மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் தப்பிய இருவரைஅதிகாரிகள் கண்டு கொள்ளாததால் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர்.

ராஜமலை பெட்டிமுடியில் ஆக.,6ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 66 பேர் இறந்தனர்.மாயமான நான்கு பேரும்இறந்ததாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அங்கு வேலை செய்து வந்த 68 குடும்பங்களை கே.டி.எச்.பி., கம்பெனிபிறகு எஸ்டேட்டுகளில்தற்காலிகமாக தங்க வைத்து பணி வழங்கினர்.தற்போது பெட்டிமுடியில் யாரும் இல்லை.அங்கு தோட்டத்தொழிலாளியாக வேலை செய்து வந்த மாடசாமிக்கு48, மனம் நலம் பாதிக்கப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பணியை இழந்தார்.

அவரை விட்டுப்பிரிந்து மனைவி , பிள்ளைகள் தமிழகம் சென்றனர்.சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறிய மாடசாமி பெட்டிமுடியில் மற்றொரு பகுதியில் தங்கி இடமலைகுடிக்கு பொருட்களை கொண்டு செல்லும் சுமைதுாக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது இடமலைகுடியில் நிலச்சரிவு நடந்த பகுதிக்கு அருகே பெருங்கடவு பகுதியில் மனநலம் பாதித்தமலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த தர்மதாயை 35,அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். நிலச்சரிவில் இருவரும் தப்பினர்.

மாடசாமி தொழிலாளி இல்லை என்பதால் நிலச்சரிவுக்கு பின் தோட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அங்கு ஆக.,15ல்கன மழையால் நிலச்சரிவு ஏற்படலாம் எனக்கருதி இருவரையும்போலீசார் அழைத்து வந்து பழைய மூணாறில் கொரோனா தடுப்பு மையமாக செயல்பட்டு வந்த கல்வித்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தங்க வைத்தனர். ஆரம்பத்தில் உணவு அளித்து வந்த நிலையில் பின்னர் அதிகாரிகள் கைவிட்டதால் இருவரும் உணவுக்கு வழியின்றி எங்கு செல்வது எனத்தெரியாமல் தவிக்கின்றனர். பல நேரங்களில் மக்கள் உணவு தந்து உதவுகின்றனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X