உத்திரமேரூர்: கொரோனா தளர்வில், எட்டு மாதங்களுக்கு பின், உத்திரமேரூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி திறக்கப்பட்டதால், மாணவ -மாணவியர் உற்சாகத்துடன் வந்தனர்.
கொரோனா ஊரடங்கில், புதிய தளர்வின்படி, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிச., 7ல் வகுப்பு துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.அதன்படி, உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசின் வழிகாட்டி நெறிமுறையுடன், நேற்று திறக்கப்பட்டது.எட்டு மாதங்களுக்கு பின், கல்லுாரி திறக்கப்பட்டதால், நடப்பு கல்வியாண்டின், முதல் நாள் நேரடி வகுப்பில் பங்கேற்க, மாணவ - மாணவியர் உற்சாகத்துடன் கல்லுாரிக்கு சென்றனர்.இயற்பியல் பிரிவு, மூன்றாமாண்டு மாணவி டி.ரபேக்கா கூறியதாவது: கொரோனா ஊரடங்கில், 'ஆன்லைனில்' வகுப்பு நடத்தப்பட்டாலும், சில நேரங்களில், மொபைல் போனில், சரியாக சிக்னல் கிடைக்காமல், ஆன்லைன் வகுப்பை தொடர முடியவில்லை.கல்லுாரி திறக்கப்பட்டு நேரடி வகுப்பில் பங்கேற்பது மட்டுமல்லாமல், சக தோழியரை பார்த்ததில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.----------------------இயற்பியல் பிரிவு மாணவர் பி.இருசப்பன் கூறியதாவது: கல்லுாரிக்குள் நுழையும்போதே, மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆய்வக பரிசோதனை குறித்து, ஆன்லைனில் விளக்கம் அளித்தாலும், சரியாக புரியவில்லை. நேரடி வகுப்பில்,செயல்விளக்கம் அளிப்பதால், எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அதேபோல், திருத்தணிஅரசு கல்லுாரி, நேற்று திறக்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முக கவசம் மற்றும் சமூக விலகலுடன் வகுப்பறையில் பாடம் கற்றனர்.ஒரு இருக்கையில் இருவர்கல்லுாரி முழுதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் கைகளை சுத்தம் செய்ய, கல்லுாரி மற்றும் வகுப்பறை நுழைவாயிலில், சானிடைசர் வழங்கும் டிஸ்பென்சர் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இருக்கைக்கு, இரு மாணவர்கள் மட்டும் அமர வைக்கப்பட்டுள்ளனர். கல்லுாரிக்கு வர இயலாத மாணவர்களுக்காக, 'ஆன்லைன்' வகுப்பும் நடத்தப்படுகிறது.முனைவர் ப.பத்மினிகல்லுாரி முதல்வர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE