தேனி : தேனி வீரபாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டூவீலரில் சென்ற கோட்டூர் ரஞ்சித்குமார் 22, கோபாலகிருஷ்ணன் 26, பலியாயினர்.இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணிக்கு டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் கோட்டூர் திரும்பி கொண்டிருந்தனர். கோபாலகிருஷ்ணன் ஓட்டினார். கம்பம்--தேனி மெயின் ரோட்டில் பின்னால் தேனி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலரில் மோதியதில் இருவரும் பலியாயினர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE