தமிழ்நாடு

ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொது நிதி; தேனி ஒன்றிய கூட்டத்தில் எதிர்ப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
தேனி : பொது நிதியை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு செலவிடுவதற்கு தேனி ஒன்றிய கூட்டத்தில் துணைத்தலைவர் முருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.தேனி ஒன்றிய கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன் (காங்.,), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், ஆண்டாள் முன்னிலை வகித்தனர்.கோட்டூரில் பழுதான ஆபத்து கட்டடங்களை அகற்ற வேண்டும். பாலம், சாக்கடை பணி

தேனி : பொது நிதியை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு செலவிடுவதற்கு தேனி ஒன்றிய கூட்டத்தில் துணைத்தலைவர் முருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

தேனி ஒன்றிய கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி (தி.மு.க.) தலைமையில் நடந்தது. துணை தலைவர் முருகன் (காங்.,), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், ஆண்டாள் முன்னிலை வகித்தனர்.கோட்டூரில் பழுதான ஆபத்து கட்டடங்களை அகற்ற வேண்டும். பாலம், சாக்கடை பணி டெண்டர் விட்டும் நடக்கவில்லை. ஒப்பந்ததாரர் முடித்த பணிக்கு பணம் வழங்காததால் தாமம் ஆகிறது. மக்கள் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை என கவுன்சிலர் மாலா தெரிவித்தார்.

பற்றாக்குறை

ஒன்றிய வரவு செலவு பட்டியலில் பற்றாக்குறை உள்ளது. இதற்கு கவுன்சிலர்கள் பணம் போட வேண்டுமா. தலைமையும் சரியில்லை. நிர்வாகம் சரியில்லை என அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா குற்றம் சாட்டினார். காட்டுநாயக்கன்பட்டியில் தொகுப்பு வீடு விழுந்துள்ளது. இதே போல் 30 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளது . பராமரிப்பிற்கு நிதி வழங்க கவுன்சிலர் கவிதா கோரினார்.

ஒன்றியத்தில் வளர்ச்சி பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு நிதி வழங்காமல் தாமதமாகிறது. பொது நிதியில் குடிநீர் பணிக்காக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது ஏன் என துணை தலைவர் பேசினார்.ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளிலும் ஜல்ஜீவன் பணி நடக்கிறது. டெண்டர் ஊரக வளர்ச்சி முகமை மூலம் விடப்பட்டது. இதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் பொது நிதியில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டூரில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில நிதிக்குழு மானியம் 8 மாதத்திற்கு 4 மாத நிதி கிடைத்துள்ளது என பி.டி.ஓ. பதிலளித்தார்.

முன்னுரிமை

ஒன்றியத்தில் பணி முடித்தவர்களுக்கு பில் வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த நிர்வாகத்தை விட தற்போது நல்ல முறையில் நடக்கிறது. குறை சொல்வதற்காக கவுன்சிலர் எதையும் பேச கூடாது என தலைவர் பதில் அளித்தார். 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X