சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி பெண் இறந்த சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சென்னை; கழிவு நீர் தொட்டியில் மாற்றுத்திறனாளி பெண் இறந்த சம்பவத்தில், வேளாண் துறை இயக்குனர் பதிலளிக்க, மாநில மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.காஞ்சிபுரம், ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, 24; மாற்றுத்திறனாளி. இவர், களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.அரசு அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால், அருகில் உள்ள

சென்னை; கழிவு நீர் தொட்டியில் மாற்றுத்திறனாளி பெண் இறந்த சம்பவத்தில், வேளாண் துறை இயக்குனர் பதிலளிக்க, மாநில மனித உரிமை ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம், ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, 24; மாற்றுத்திறனாளி. இவர், களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.அரசு அலுவலகத்தில் கழிப்பறை இல்லாததால், அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே, புதிதாககட்டி வரும் வீட்டில் உள்ள கழிப்பறையை, மாற்றுத்திறனாளியான சரண்யா பயன்படுத்தியப்போது, அங்கு மூடப்படாமல் இருந்த கழிப்பறை தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.அரசு அலுவலகமான வேளாண் துறை அலுவலகத்தில், கழிப்பறை வசதி இல்லாததே சரண்யாவின் மரணத்திற்கு காரணம் என, பணியாளர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.ஆணைய உறுப்பினர், சித்தரஞ்சன் மோகன்தாஸ், வேளாண் துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் குறித்து, மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X