சென்னை; சென்னையின் அறிவுத் திருவிழாவாக, ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சி, இந்தாண்டு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, வாசகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, 'பபாசி' நிர்வாகிகள் கூறியதாவது:தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கூட, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோரிக்கைபுத்தகக் காட்சியைப் பொறுத்தவரை, அறிவுசார் விழாவாக நடத்தப்படுவதால், தேவையில்லாமல் கூடுவது குறைவு தான். எனவே, அரசு புத்தகக் காட்சி நடத்த அனுமதி அளிக்கும் என, நம்பியுள்ளோம். ஏற்கனவே, கொரோனாவால், புத்தக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியால், பதிப்பகங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். இது குறித்து, பள்ளிக்கல்வி துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.நாளை செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில், எப்போது, எப்படி புத்தகக் காட்சியை நடத்துவது என்பது குறித்து, ஆலோசிக்க உள்ளோம். அடுத்து, பொதுக்குழுவைக் கூட்டி முடிவு செய்து, செயல்முறை குறித்து அரசிடம்அறிவிக்க உள்ளோம். அறிவிப்புதொடர்ந்து, ஜனவரி அல்லது பிப்ரவரியில் புத்தகக் கண்காட்சி எங்கு, எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, முறையாக அறிவிக்க உள்ளோம்.முதல்வர், தொடர்ந்து புத்தகக் காட்சியை செம்மையாக நடத்துவதற்காக, 75 லட்சம் ரூபாய் அரசு நிதி அளிப்பதாக, கடந்தாண்டு, புத்தகக் காட்சியின் நிறைவு விழாவில் அறிவித்தார். அதையும் பெற்று, சிறப்பாக நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE