வடபழநி; வடபழநியில், பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம், மதுபோதையில் தகாத முறையில் நடந்த காவலரை, அப்பகுதி மக்கள், நன்கு, 'கவனித்து' காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், வடபழநியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, 100 அடி சாலையில் உள்ள, சிம்ஸ் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.அப்போது, டூ - வீலரில் மதுபோதையில் வந்த மர்மநபர், அவரிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.இதை எதிர்பாராத அப்பெண், பயத்தில் அலறியுள்ளார். சத்தம் கேட்டு, அங்கு வந்த மக்கள், மர்மநபரை நையப்புடைத்தனர்.அப்போது, அவர், எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ராஜு, 45, என்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த வடபழநி போலீசார், பெண்ணிடம் தகாத முறையில் நடந்த ராஜுவை. காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.விசாரணைக்கு பின், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, ராஜு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காவலரை, பொதுமக்கள் நையப்புடைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE