தமிழ்நாடு

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரி மக்களுக்கு விமோசனம் எப்போது?

Added : டிச 08, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
செம்மஞ்சேரி; செங்கல்பட்டு மாவட்ட நீர்நிலைகளின் உபரிநீரும், பக்கிங்ஹாம் கால்வாயின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீராலும், செம்மஞ்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது. இரு மாவட்ட நிர்வாகம் கலந்து பேசி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஜவகர் நகர், எழில்முக நகர் பகுதியில், 400க்கும்
 வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரி மக்களுக்கு விமோசனம் எப்போது?

செம்மஞ்சேரி; செங்கல்பட்டு மாவட்ட நீர்நிலைகளின் உபரிநீரும், பக்கிங்ஹாம் கால்வாயின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீராலும், செம்மஞ்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது. இரு மாவட்ட நிர்வாகம் கலந்து பேசி, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஜவகர் நகர், எழில்முக நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி, சென்னை மாவட்டமாக இருந்தாலும், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் உள்ளது.இந்த மாவட்டத்தில் உள்ள, நாவலுார், ஏகாந்துார், முட்டுக்காடு ஆகிய ஊராட்சியில் வடியும் மழைநீர், வாணியம்சாவடி வடிகால் வழியாக, பக்கிங்ஹாம் கால்வாய் செல்ல வேண்டும்.வாணியம்சாவடி பகுதியில், ஆக்கிரமிப்பு உள்ளதால், மூன்று ஊராட்சி எல்லையில் வடியும் மழைநீர், ஜவகர் நகர், எழில்முக நகரில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.அங்கிருந்து, செம்மஞ்சேரி கால்வாய்க்கு, 2,000 அடி நீளத்தில், மண் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், துவங்கும் இடத்தில், 20 அடி அகலம்; 1,000 அடி நீளத்தை கடந்து, 3 அடி அகலம் என இருப்பதால், மழைநீர் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தியது.மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, ஒட்டியம்பாக்கம், மேடவாக்கம், காரணை உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏரி உபரி நீரும் வருவதால், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் தான், 200வது வார்டில் உள்ள, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், எழில்முக நகர், காந்திநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் பாதுகாக்கப்படும்.இதற்கு, இரு மாவட்ட நிர்வாகமும் கலந்து பேசி, தீர்வு காண வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.கண்டன ஆர்ப்பாட்டம்ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழித்தடங்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று, செம்மஞ்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-202009:01:23 IST Report Abuse
பேசும் தமிழன் குடிநீர் வசதிக்காக இருந்த ஏரியில் ஆக்ரமித்து வீடு கட்டி கொண்டு... இப்போது தண்ணிர் வருது என்று சொன்னால் எப்படி.... ஏரியில் தண்ணிர் வராமல் பின்ன என்ன புகை வண்டி அல்லது ஆகாய விமானம் வருமா???
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
08-டிச-202023:02:37 IST Report Abuse
s t rajan City க்குள் even ஆள்வார்பேட்டையே சாக்கடையாய் நாறுகிறது என்றால், புறநகர்ப் பகுதிகளைக் கேட்கவா வேண்டும்.
Rate this:
Cancel
08-டிச-202020:49:09 IST Report Abuse
ஆப்பு இனிமே எங்கே மழை வரப்போகுதுன்னு கண்ட எடத்தையெல்லாம் ப்ளாட் போட்டு வீடு கட்டிட்டாங்க. கொரோனா வந்து ஊரை முடக்கி, பூமியை குளிர்வித்து மழை கொட்டோ கொட்டுனு கொட்டிருச்சு.
Rate this:
09-டிச-202008:42:36 IST Report Abuse
மனுநீதிஅய்யா ஆப்பு, இந்த செம்மஞ்சேரி பற்றி ஒரு சேதி தெரியுமா? இங்கு குடியேறிய மக்கள் சென்னைக்குள் சேரியில் வாழ்ந்த மக்கள். இவர்களை ஏதோ திட்டம் அது இதுன்னு இடத்தை ஆட்டையை போட இங்கே துரத்தியவர் சாட்சாத் கட்டுமரமே தான். இங்கிருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமே அழிந்தது. சிலர் ஐடி கம்பனிகளில் சுகாதார பணிக்கு சென்றனர் பலர் அவர்கள் மீது இருந்த குற்றப்பின்னணி காரணமாக திண்ணை தூங்கிகள் ஆகினர். எங்கு ஆக்கிரமிப்போ அங்கு திமுகவுக்கு ஒரு பங்கு உண்டு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X