மெட்ரோ ரயிலில், சிறப்பு வகுப்பு பெட்டி சாதாரண பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
ரயிலில், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மூன்று, பெண்கள் பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்படுகிறது.பெண்கள் பெட்டியில், ஒரு பகுதி பிரிக்கப்பட்டு சிறப்பு வகுப்பு என, பெயரிடப்பட்டு, இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.இப்பெட்டியில், இரண்டாம் வகுப்பு பொது பெட்டியைவிட, இருக்கை வசதியில், சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ப, பிரத்யேக வசதி ஏதும் செய்யப்படவில்லை.பெண்கள் பெட்டியில் இணைப்பாக, இப்பெட்டி உள்ளதால், ஆண் பயணியர் பெண்கள் பெட்டியில் ஏறி, உள்கதவு வழியாகவும், சிறப்பு வகுப்பு பெட்டிக்கு செல்கின்றனர் என, சில குறைபாடுகளை கூறி, கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும் குறிப்பிட்டு, பயணி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், சிறப்பு வகுப்பு பெட்டி, பொது பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.இப்பெட்டி, பெண்கள் பெட்டியில் ஒரு பகுதியாக உள்ளதால், இருபாலரும் பயணம் செய்யும்போது, பெண் பயணியருக்கு சிரமம் ஏற்படும். இதனால், பெண் பயணியர் மட்டும், தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE