பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்; தலைமை செயலாளர் உத்தரவு

Added : டிச 08, 2020
Share
Advertisement
நிலக்கோட்டை : அரசு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆபீஸ் ஆட்டோமேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் தேவை என தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.தமிழக அரசுத் துறைகள் கணிணி மயமாக்கப்பட்டு உள்ளதால் அரசுப் பணிகளில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் படிப்பு அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர்

நிலக்கோட்டை : அரசு பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆபீஸ் ஆட்டோமேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு அவசியம் தேவை என தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக அரசுத் துறைகள் கணிணி மயமாக்கப்பட்டு உள்ளதால் அரசுப் பணிகளில் சேருவோருக்கு கம்ப்யூட்டர் படிப்பு அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆபீஸ் ஆட்டோமேசன் எனும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு கட்டாய தேவை என அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதனை ஏற்று தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:அனைத்து அரசு பணிகளுக்கும் ஆபீஸ் ஆட்டோமேசன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இச் சான்றிதழ் படிப்பிற்கு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பின்வரும் கல்வித் தகுதியை பரிந்துரை செய்துள்ளது.

10ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தமிழ், ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது இளநிலை படிப்பை தமிழக அரசு அங்கீகாரம்பெற்ற தட்டச்சு பயிற்சி நிலையம், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பாலிடெக்னிக்களில் 120 மணி நேர பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.டாக்டர், பொறியாளர், வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பதவி உட்பட உதவியாளர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர், டிரைவர்கள் உள்ளிட்ட கீழ்நிலைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ் கல்வித் தகுதி தேவை'' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X