திண்டுக்கல் : 'மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி, வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனைப்பெற 1 முதல் 8 ம் வகுப்பு வரை, 9 ம் வகுப்பிற்கு மேல் பயிலும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், ஆதார் நகல், புகைப்படம், விண்ணப்பத்தில் தலைமையாசிரியர், கல்லுாரி முதல்வர் கையொப்பத்துடன் விண்ணப்பிக்கலாம்.வாசிப்பாளர் உதவித்தொகை பெற, 9 ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை 75 சதவீதம் பார்வைத்திறன் குறையுள்ளோர் உரிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் டிச.30 க்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0451-2460099 ல் பேசலாம் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE