n
கொரோனா நோய் பரவலை தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. பொதுமக்களும் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை கடத்துகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை முதற்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு போட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டம் வாரியம் அரசு, தனியார் மற்றும் கிளினிக்குகளில் பணியாற்றுவோர் விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆயிரம் பேர்
மாவட்டத்தில் மொத்தமுள்ள 54 அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், 800 க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1000 பேரின் பெயர், முகவரி, பணியாற்றும் இடம் என விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா மருந்தால் பக்க விளைவு ஏற்பட்டு விடுமோ என பயந்தும் சிலர் விவரங்களை தர தயக்கம் காட்டுகின்றனர். விவரம் சேகரிக்கப்பட்டவர்களுக்கு தான் முதலில் தடுப்பூசி போடப்படுமா என்பது தெரியவில்லை என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE