பொது செய்தி

தமிழ்நாடு

வர்த்தகர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்: முன்னாள் அமைச்சர் பெரியசாமி பேச்சு

Added : டிச 08, 2020
Share
Advertisement
பழநி : ''வர்த்தகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்'' என, தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.பழநியில் தி.மு.க., சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்

பழநி : ''வர்த்தகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்'' என, தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.

பழநியில் தி.மு.க., சார்பில் 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து வர்த்தகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:பழநியின் வளர்ச்சியில் தி.மு.க.,வுக்கு பெரும்பங்கு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் தான் பஸ்ஸ்டாண்ட், -கொடைக்கானல் சாலை, சென்னைக்கு ரயில் வசதி செய்யப்பட்டது. பழநி முருகன் பா.ஜ.க.,வினருக்கு மட்டுமே சொந்தம் அல்ல.

வணிகர்களின் கோரிக்கைகளான புதிய சுற்றுலா பஸ்ஸ்டாண்ட், மானிபகாடு பகுதியில் அடைத்த கடைகளை திறக்க வழி செய்யப்படும். ரயில்வே மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் செபாஸ்டியன், விமலபாண்டியன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பழனிச்சாமி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X