பழநி : பழநி வரதமாநதி அணை, பாலாறு - பொருந்தலாறு அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றுவது அதிகரித்துள்ளது.
நேற்று மதியம் முதல் சண்முகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வரதமாநதிஅணையில் இருந்து 2500 கனஅடிக்கு அதிகமான உபரி நீரும், பாலாறு - பொருந்தலாறு அணையிருந்தும் 4000 கனஅடிக்கு மேல் உபரி நீர் ஆற்றில் வெளியேறுகிறது.இதனால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு சண்முகநதியில் எற்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:
பரப்பலாறு அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 5:00 மணி நிலவரப்படி 85 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்கிறது. விரைவில் பரப்பலாறு அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளது. எனவே நங்காஞ்சி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையான இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE