திண்டுக்கல் : 'தபால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.500 ஆக இருக்க வேண்டும்' என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: தபால் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.50 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதை ரூ.500 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் புதிய விதிமுறைப்படி, 2021 மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கழிக்கப்பட்டு இருப்பு தொகை குறைக்கப்படும்.
பின் சேமிப்பு கணக்கும் காலாவதி ஆகிவிடும். ஏற்கனவே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை உயர்த்திக் கொள்ள டிச.11 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சேமிப்பு கணக்கு உள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி கொள்ள வேண்டும் என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE