அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., பருப்பு அ.தி.மு.க.,விடம் வேகாது': அமைச்சர் சீனிவாசன் சொல்கிறார்

Added : டிச 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பழநி : பழநி தாளையூத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் பிறகட்சிகளில் இருந்து விலகிய பலர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.பின் அமைச்சர் பேசியதாவது: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசின் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்யலாம். ஸ்டாலின் வாரிசு உதயநிதி, அவரது வாரிசு எனத் தொடரும் தி.மு.க.,வில், அவர்களின்
 'தி.மு.க., பருப்பு அ.தி.மு.க.,விடம் வேகாது': அமைச்சர் சீனிவாசன் சொல்கிறார்

பழநி : பழநி தாளையூத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முன்னிலையில் பிறகட்சிகளில் இருந்து விலகிய பலர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

பின் அமைச்சர் பேசியதாவது: மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசின் மூலம் மக்களுக்கு அதிக நன்மைகள் செய்யலாம். ஸ்டாலின் வாரிசு உதயநிதி, அவரது வாரிசு எனத் தொடரும் தி.மு.க.,வில், அவர்களின் குடும்பத்தினரிடையே போட்டி உள்ளது.வருகிற சட்டசபை தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியை அ.தி.மு.க., மீட்டெடுக்கும்.

இந்த முறை தேர்தலில் அ.தி.மு.க., பலத்துடன் போட்டியிடும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களை எதையாவது சொல்லி திசைதிருப்புவது தி.மு.க.,வினரின் வேலை. இந்த பருப்பு இனி அ.தி.மு.க.,விடம் வேகாது, என்றார்.இதில் பரமசிவம் எம்.எல்.ஏ., தொப்பம்பட்டி ஒன்றியம் மேற்கு கழக செயலாளர் கிட்டுச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
08-டிச-202016:26:31 IST Report Abuse
Vijay D Ratnam ரஜினி கட்சி பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் அதில் தனிக்கட்சி தொடங்கி அழகிரி இணையலாம். அப்போது பாஜக அதிமுக கூட்டணி முடிவுக்கு வந்து வெளியேறலாம். அப்படி வெளியேறினால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கு இன்னொரு சாய்ஸ் இருப்பதால் அதிக சீட் கேட்டு கூட்டணி ஆட்டம் காணும். அப்போது அதிமுக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் சில இஸ்லாமிய கட்சிகளும் இணைத்துக்கொண்டு பலமான ஒரு கூட்டணி அமைக்கலாம். மார்ச் முதல் வாரத்தில் 2ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக கூட்டணி அபார வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கலாம். இரண்டாம் இடத்துக்கு பாஜக ரஜினி கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் போட்டி இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X