பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று வழக்கம் போல பஸ்கள் ஓடும்

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று(டிச.,8) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் வழக்கம் போல பஸ், ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நாடு தழுவிய
BharatBandh, Tamilnadu, bus, train, பஸ், ரயில்,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை : வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று(டிச.,8) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் வழக்கம் போல பஸ், ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் டில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் தி.மு.க. - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


latest tamil news


இப்போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். பஸ்கள் அனைத்தும் இன்று வழக்கம் போல் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களும் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்துள்ளன. எனவே ஆட்டோக்கள் அதிகம் இயங்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 'பந்த்' காரணமாக எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளன. இதனால் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
08-டிச-202011:23:24 IST Report Abuse
Srinivas ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிப்போனது. பேருந்து ஓடுதாம்.. அடிமைகள் தனது எஜமானனுக்கு விசுவாசத்தை காட்டணுமே... அதனாலதான் இந்த செய்தி. பஞ்சாப் விவசாயிகள் மூலம் மிகப்பெரிய சாவுமணி இந்த கொள்ளைக் கும்பலுக்கு அடிக்கப்பட்டுள்ளது. இனிமேல் எடுபடாது...இந்த கொள்ளைக் கும்பலின் வாய் சவடால்...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-202017:17:52 IST Report Abuse
தமிழவேல் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகின்றார்கள் என்று அர்த்தம். பாட்டி ஜெயிலுக்குப் போகும்போது செய்தானுவோளே (ஒரு உதாரணத்துக்கு) அதுபோல கிடையாது....
Rate this:
Cancel
rauf thaseem - mawanella,இலங்கை
08-டிச-202009:17:45 IST Report Abuse
rauf  thaseem ஓடும் ஓடமென்ன வெள்ளத்தில் மிதந்து ஓடம் போலஒடும் இன்று மட்டுமா
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-டிச-202007:50:02 IST Report Abuse
VENKATASUBRAMANIAN சுடலைக்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. இதுதான் சாக்கு என்று களத்தில் இறங்கிவிட்டார். நேற்று திமுகவின் சரவணன் டைம்ஸ் நாவ் விவாதத்தில் பதில் சொல்ல முடியாமல் முழி பிதுங்கினான்.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
08-டிச-202008:11:37 IST Report Abuse
vadiveluசரவணனுக்கு விழி பிதுங்கி ஓடுவது இது முதல் முறை இல்லையே,...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X