கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் திணறல்

Added : டிச 08, 2020
Share
Advertisement
அடையாறு: அடையாறு மண்டலத்தில், இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், கழிவுநீர் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியாமல், வாரியம் திணறுகிறது.அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, பெசன்ட்நகர், அடையாறு, திருவான்மியூர், தரமணி, கோட்டூர்புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள், இந்த மண்டலத்தை உள்ளடக்கியவை.இங்கு, கழிவுநீர் பிரச்னை அதிகமாக

அடையாறு: அடையாறு மண்டலத்தில், இளநிலை பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், கழிவுநீர் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியாமல், வாரியம் திணறுகிறது.அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. வேளச்சேரி, சைதாப்பேட்டை, கிண்டி, பெசன்ட்நகர், அடையாறு, திருவான்மியூர், தரமணி, கோட்டூர்புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள், இந்த மண்டலத்தை உள்ளடக்கியவை.இங்கு, கழிவுநீர் பிரச்னை அதிகமாக இருக்கும். இதற்கு தீர்வு காண, மண்டலத்தில் போதிய இளநிலை பொறியாளர்கள் இல்லை. குறிப்பாக, வேளச்சேரி, கிண்டி, தரமணி பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் புகார்களுக்கு, உடனுக்குடன் தீர்வு காண முடியாமல், வாரியம் திணறுகிறது.கழிவுநீர் பிரச்னையை சரிசெய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், தொற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கின்றன.வார்டுக்கு ஒரு இளநிலை பொறியாளர் வீதம், 13 பேர் இருக்க வேண்டும். ஆனால், மொத்தம், ஆறு பேர் உள்ளதால், ஒரு பொறியாளர், இரண்டு வார்டுகள் வீதம் பார்க்க வேண்டி உள்ளது.மழை நேரத்தில், கழிவுநீர் பிரச்னை அதிகமாக இருப்பதால், போதிய இளநிலை பொறியாளர்கள் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X