மதுரை : மதுரையில் நுகர்பொருள் அண்ட் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க 67 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது.
செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார். நிர்வாக பொறுப்பாளர் செல்வராஜன், துணை தலைவர்கள் ஜெயவேல், நாச்சியப்பன், பாலமோகன், துணை செயலாளர்கள் செல்வம், கலைமணி, தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர்.மாசி வீதிகளில் ரோடு பணிகளை விரைந்து மாநகராட்சி முடிக்க வேண்டும்.
கீழ மாசி வீதியில் வாகனங்களில் சரக்குகளை இறக்க, ஏற்ற காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை அனுமதிக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் நடை திறப்பை இரவு 9:30 மணி வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் சோமசுந்தரம்,ஜெயசங்கர், ஜெயராஜ் உள்ளிட்டோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE