சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...

Added : டிச 08, 2020
Share
Advertisement
மேலுாரில் டூவீலர் திருட்டுமேலுார்: செக்கடி மஸ்தான் அலி38, டூவீலரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்றவர் கைதுகொட்டாம்பட்டி: பள்ளபட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது மது விற்ற வெள்ளமலைப்பட்டி ரவிச்சந்திரனை 52, கைது செய்து 12

மேலுாரில் டூவீலர் திருட்டு

மேலுார்: செக்கடி மஸ்தான் அலி38, டூவீலரை ரோட்டோரம் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றவர் திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மது விற்றவர் கைது

கொட்டாம்பட்டி: பள்ளபட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது மது விற்ற வெள்ளமலைப்பட்டி ரவிச்சந்திரனை 52, கைது செய்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

ஆஸ்டின்பட்டி: தனக்கன்குளம் முருகன் மனைவி சிவகாமசுந்தரி 42, நேற்று முன் தினம் மாலை வீடு அருகே சென்ற போது டூவீலரில் சென்ற 2 நபர்கள்கழுத்தில் கிடந்த தங்கசெயினை பறிக்க முயன்றனர்.சுதாரித்த சிவகாமசுந்தரி செயினை பிடித்துக் கொண்டு சத்தமிட்டார். செயினின் ஒரு பகுதியை மட்டும் அவர்கள் பறித்து தப்பினர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

திருமங்கலம்: கப்பலுார் பாண்டிதுரை 30, இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்கள் பிரதாப், சுந்தரபாண்டியுடன் ரிங்ரோட்டை சொக்கநாதன்பட்டி பிரிவில் கடக்க முயன்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. காயமடைந்த 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுந்தரபாண்டி இறந்தார். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருடியவர்கள் கைது

மேலுார்: மேலுார் காந்திஜி பூங்கா ரோட்டை சேர்ந்த பிரபு 25, நேற்று அதிகாலை சேனல் ரோடு தனியார்மருத்துவமனை முன்பு டூவீலரை நிறுத்தியிருந்தார். இவரது டூவீலரை திருடிய இருவரை அருகே இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் மில்கேட்டை சேர்ந்த ரஞ்சித்குமார்24, ஸ்ரீதர் 26 என்பது தெரிந்தது. கைது செய்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X