பொது செய்தி

தமிழ்நாடு

'மதுரையின் கம்பீரம்' ஏ.வி., பாலத்திற்கு இன்று வயது 131

Added : டிச 08, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை ஏ.வி.பாலத்திற்கு 131 வயது ஆகிறது. இதை பாரம்பரியசின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.வைகை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இப்பாலத்திற்கு 1886 டிச., 8 அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள்பணி நடந்தது. 1889 டிச., 6 பாலம் திறக்கப்பட்டது.அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் பெயர் சூட்டப்பட்டது. இதுதான்
 'மதுரையின் கம்பீரம்' ஏ.வி., பாலத்திற்கு இன்று வயது 131

மதுரை : மதுரை ஏ.வி.பாலத்திற்கு 131 வயது ஆகிறது. இதை பாரம்பரியசின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வைகை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இப்பாலத்திற்கு 1886 டிச., 8 அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று ஆண்டுகள்பணி நடந்தது. 1889 டிச., 6 பாலம் திறக்கப்பட்டது.அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டரின் பெயர் சூட்டப்பட்டது. இதுதான் சுருக்கமாக ஏ.வி., பாலம் எனப்படுகிறது.

வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் பாலம் இது. பாலம் 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளம் கொண்டது. இதை கட்டி முடிக்க ரூ.2.85 லட்சமானது.கட்டுமான பணிக்கு ஆங்கிலேயர் தொழில்நுட்பம், தமிழரின் பழங்கால கட்டுமான யுக்தி பயன்படுத்தப்பட்டது.

உறுதித்தன்மைக்காக ஆர்ச் வடிவில் 16 துாண்கள் நிறுவப்பட்டன. 100 ஆண்டுகள் வரை இப்பாலம் தாக்குப் பிடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் நுாற் றாண்டை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கிறது.தினமும் 3 லட்சம் வாகனங்கள் இதன் மேல் பயணிக்கின்றன. மதுரையின் அடையாளமான இப்பாலத்தை பழமை மாறாமல் உறுதிப்படுத்தும் பணியை மேற்கொண்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மக்கள் விரும்புகின்றனர்.

வைகை நதி மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ''பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும். பால அடிப்பகுதியில் சில இடங்களில் கான்கிரீட் உதிர்கிறது. 2, 7, 8 ம் துாண்கள் சேதமடைந்துள்ளன. அஸ்திவாரத்தை நிபுணர்கள் மூலம் சோதித்து வலுப்படுத்த வேண்டும். பால கைப்பிடி சுவர்களில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. சரி செய்ய வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
08-டிச-202010:29:48 IST Report Abuse
veeramani ஆல்பர்ட் விக்டர் என்ற மேம்பாலத்தை பாரம்பரிய சின்னமாக அம்மாவின் அரசு விரைவில் அறிவிக்கவேண்டும்.இதன் அருகில்தான் தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற அழகர் வைகையில் இறங்குவார். மேலும் வண்டிகளின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு , நடைபாளமாக அறிவித்தால் ,தொன்மையான பலன்களை பாதுகாக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X