மதுரை: மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது: கிராமப்புற ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு 2021 ஜன., 24 நடக்கிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிச.,14 க்குள் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய் ரூ.ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கட்டணம் ரூ.10. தகுதியான விண்ணப்பங்களை டிச., 17க்குள் கல்வி இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜன.,18 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம், என தெரிவித்துள்ளார்.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை அரசு சார்பில் ஆண்டிற்கு தலா ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE