பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன்
கருவி பற்றாக்குறை காரணமாக ஆறு கொரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளனர். இதில்
ஐந்துபேர் ஐசொலேஷன் வார்டிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும்
சிகிச்சை பெற்று வந்தனர்.
![]()
|
அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் கட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. நோயாளிகளுக்கு அவ்வபோது ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறதா என்று மருத்துவர்கள் சோதனை செய்யவேண்டும். 6 பேரது மரணத்தை தொடர்ந்து அந்த மருத்துவமனையின் இயக்குனர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
![]()
|
இதுகுறித்து அடுத்த ஐந்து நாட்களுக்குள் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தைமூர் சலீம் ஜாத்ரா என்ற மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இரவு எட்டு மணியிலிருந்து மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் 12 மணிவரை இதுகுறித்து மருத்துவர்கள் சோதனை செய்யவில்லை.
![]()
|
மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் அஜாக்கிரதை காரணமாகவே நோயாளிகள் மரணம் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாடு முழுவதும் அவசர சிகிச்சை பிரிவுகள் தற்போது நோயாளிகளின் நிரம்பி வழிகின்றன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement