மதுரை : மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க கிளை சார்பில் 2021 ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா நடந்தது.
முதல் பிரதியை கிளை தலைவர் முத்துகிருஷ்ணன் வெளியிட மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி பெற்றார். கிளை பொருளாளர் சீனிவாசன், மாநில அமைப்பாளர் ஸ்ரீராம், சிம்மக்கல் கிளை தலைவர் ராஜகோபாலன், விளாச்சேரி தலைவர் மரகதம், நாகமலை புதுக்கோட்டை தலைவர் செல்வம், எல்லீஸ்நகர் நிர்வாகி சாம்பசிவம், எஸ்.எஸ்.காலனி கிளை நிர்வாகி சந்திரசேகர், மாநில உதவி தலைவர் பாமா பங்கேற்றனர். நிர்வாகிகள் ரமேஷ், கந்தகுரு, மணிகண்டன், ஷங்கர், கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE