மதுரை : மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்களை திரும்ப பெற கோரி டில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன் 'பாரத் பந்த்' போராட்டத்தில் பங்கேற்கிறது.சங்க தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: விவசாயம், விவசாயிகளை பாதுகாக்க தொழில் வணிக துறை கடமைப்பட்டு உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற இன்று (டிச.,8) நடக்கும் 'பாரத் பந்த்' அறப்போராட்டத்தில் பங்கேற்கிறோம் என தொழில் வணிக துறை சார்பில் தெரிவிக்கிறேன், என்றார்.
''விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் 'பாரத் பந்த்'ல் சங்கம் பங்கேற்கவில்லை. விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்தால் பங்கேற்போம்,'' என, அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர், விற்பனையாளர்கள் சங்க தலைவர் திருமுருகன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று அனைத்து வணிகர்களும் வணிக நிறுவனம் முன் பச்சை கொடி பறக்க விட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மதுரை மாவட்ட தலைவர்ராஜபாண்டியன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE