தமிழ்நாடு

வண்டியூர் கண்மாய் நிரம்பி ஒரு வாரமாக மறுகால் பாய்கிறது!

Added : டிச 08, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை : மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்பி ஒரு வாரமாக மறுகால் பாய்கிறது. ஒரு போக சாகுபடி முடியும் நிலையில் தண்ணீர் வரத்து தொடர்வதால் அடுத்தாண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இக்கண்மாயின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 280 எக்டேர். இதன் மூலம் 550 ஏக்கரில் பாசனம் நடக்கிறது. தற்போது கண்மாயில் 110 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு
வண்டியூர் கண்மாய் நிரம்பி ஒரு வாரமாக மறுகால் பாய்கிறது!

மதுரை : மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்பி ஒரு வாரமாக மறுகால் பாய்கிறது. ஒரு போக சாகுபடி முடியும் நிலையில் தண்ணீர் வரத்து தொடர்வதால் அடுத்தாண்டு முழுவதும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இக்கண்மாயின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 280 எக்டேர். இதன் மூலம் 550 ஏக்கரில் பாசனம் நடக்கிறது. தற்போது கண்மாயில் 110 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு கால்வாயிலிருந்தும் உத்தங்குடி, கொடிக்குளம், மங்களக்குடி கண்மாய்களிலிருந்து கிடைக்கும் உபரிநீரால் வண்டியூர் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், டிச. 1 முதல் மறுகால் பாய்கிறது. இ

க்கண்மாயில் இயற்கையாக அமைந்த கலுங்கு வழியாக வினாடிக்கு 120 - 130 கனஅடி நீர் வெளியேறுகிறது. கண்மாய் நிரம்பிய நிலையில், கரை உடையும் ஆபத்து இருப்பதாக வதந்தி பரவியது.

பெரியாறு பிரதான கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறியதாவது: வண்டியூர் கண்மாயின் கரை 2300 மீட்டர் நீளம். இரண்டாண்டுகளுக்கு முன் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்மாய்க்குள் ஆக்கிரமிப்பு இல்லை. இங்குள்ள 5 ஷட்டர்கள் திறக்காமல் இயற்கையான கலுங்கு வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.

இந்த நீர் வைகையில் கலந்து விரகனுார் மதகணை வழியாக மற்ற கண்மாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் முன் தடுப்பு கரை வழியாகவும் தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.வண்டியூர் கண்மாய் மூலம் ஒரு போக பாசனம் நடக்கிறது. ஜன., வரை கண்மாய்க்கு நீர்வரத்து இருக்கும். பாசனப்பணிகள் அத்துடன் முடிந்துவிடும். இதனால் அடுத்தாண்டு வரை தண்ணீர் பிரச்னை இருக்காது.

சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும். தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியிருந்தாலும் உடையும் ஆபத்து இல்லை. அதிக தண்ணீர் வந்தாலும் 5 ஷட்டர்கள் வழியாக வெளியேற்றப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-டிச-202023:23:16 IST Report Abuse
முருகன் திணமலருக்கு வாசகரின் வேண்டுகோள், இந்த பகுதி ரோட்டில் உபரி நீர் வெளியேறும் இடத்தில், மேலமடையிலிருந்து செல்லும் போது இடது புறம் தடுப்புகள் வைக்கப்பட வேண்டும், இல்லையேல் செண்ணை மதுரவாயல் மரணங்கள் போல நிகல வாய்ப்புண்டு. அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தடுப்பு அமைக்க உதவ வேண்டும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-டிச-202006:52:18 IST Report Abuse
Bhaskaran இன்னுமா அதை பட்டா போட்டு விற்க ஏற்பாடு நடக்கல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X