பனாஜி : கோவா அருகே 'மிக் 29கே' பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கமாண்டர் நிஷாந்த் சிங்கின் உடல் 12 நாட்களுக்கு பின் கடலுக்கு அடியில் நேற்று மீட்கப்பட்டது.
நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பலில் இருந்து 'மிக் 29கே' போர் விமானம் கடந்த மாதம் 26ல் கோவா அருகே அரபிக்கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டது.விமானத்தை இரண்டு பைலட்கள் இயக்கினர். அப்போது ஏற்பட்ட விபத்தில் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. ஒரு விமானி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவரை காணவில்லை என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரை தேடும் பணியில் ஒன்பது போர் கப்பல்கள் மற்றும் 14 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. விமானத்தின் எரிபெருள் டாங்க் இறக்கை இயந்திரம் உள்ளிட்ட சில உதிரி பாகங்கள் கடந்த வாரம் கடலில் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் காணாமல் போன கமாண்டர் நிஷாந்த் சிங்கின் உடல் 12 நாட்களுக்கு பின் கோவா கடற்கரை பகுதியில் இருந்து 48 கி.மீ. துாரத்தில் கடலுக்கு அடியில் 230 அடி ஆழத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.இந்த தகவலை கடற்படை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE