பொது செய்தி

இந்தியா

எல்லை தாண்டி வந்த சகோதரிகள் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைப்பு

Updated : டிச 08, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
ஜம்மு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு சகோதரிகளும் நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர் 17 சனா ஜபாயர் 13 என்ற இரு சகோதரிகள் நேற்று முன்தினம் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அந்த இரண்டு
PoK, sisters, India Border, crosed

ஜம்மு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு சகோதரிகளும் நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர் 17 சனா ஜபாயர் 13 என்ற இரு சகோதரிகள் நேற்று முன்தினம் வழிதவறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அந்த இரண்டு மைனர் சிறுமியரையும் பாதுகாப்புப் படையினர் தடுப்பு காவலில் வைத்தனர்.

இந்நிலையில் அந்த இரண்டு சிறுமியரும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இரண்டு சிறுமியரும் 'சாக்கன் தா பாக்' எல்லைப் பகுதி வழியாக இன்று பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.


latest tamil news



மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அந்த சகோதரிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இரு சிறுமியருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி ராணுவ வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
10-டிச-202008:42:29 IST Report Abuse
 Muruga Vel கர்த்தார்புர் நான்கணா சாஹிப் சாரதா பீடம் இதெல்லாம் பாகிஸ்தானில் ..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-டிச-202004:47:59 IST Report Abuse
J.V. Iyer இந்தியமண்ணின் பெருமை. பெருமிதம் கொள்ளவேண்டும். சம்மந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-டிச-202018:59:53 IST Report Abuse
Endrum Indian என்னனு என்னவோ முஸ்லிம்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்பிக்கை இல்லவே இல்லை. இவர்கள் உளவு பார்க்கத்தான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன என்பது எனது கருத்து. வழி தவறி உள்ளே நுழைந்து விட்டனராம்???சும்மா இந்த டூப்பு எல்லாம் விட வேண்டாம்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10-டிச-202005:58:42 IST Report Abuse
 Muruga Velஇந்த பெண்களின் தந்தை கசாப்பு கடைக்காரர் .ரெண்டு மனைவி .எட்டு குழந்தைகள் ..ஆறு மாதம் முன்பு தந்தை இறந்து விட்டார் ..வீட்டில் வறுமை காரணமாக தினம் தினம் சண்டை சச்சரவு ..இந்த ரெண்டு சகோதரிகளும் இந்திய பகுதிக்கு வந்து விட்டனர் .வீட்டில் ஒரு மிஸ்ஸிங் கம்பளைண்ட் கொடுத்ததோடு சரி ...இது தான் நிலவரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X