கொரோனாவால் கோடிக்கணக்கானோர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம்: ஐநா

Updated : டிச 10, 2020 | Added : டிச 08, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான தாக்கத்தால் அடுத்த 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.7 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம், இது உலகில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை 100 கோடிக்கும் அதிகமாக்க கூடும் என்று ஐநா வளர்ச்சித்
Covid-19, ExtremePoverty, UN, கொரோனா, வறுமை, ஐநா

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த 10 ஆண்டுகளில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்படலாம் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் கடுமையான தாக்கத்தால் அடுத்த 2030ம் ஆண்டுக்குள் கூடுதலாக 20.7 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படலாம், இது உலகில் உள்ள ஏழைகளின் எண்ணிக்கையை 100 கோடிக்கும் அதிகமாக்க கூடும் என்று ஐநா வளர்ச்சித் திட்டத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. கொரோனா தொற்று நோயின் பல விளைவுகளை ஐநா மதிப்பீடு செய்து வந்த நிலையில், கொரோனா தோற்று நோயின் நீண்ட கால விளைவுகளையும் மதிப்பீடு செய்து வந்தது.


latest tamil news


அதன் அடிப்படையில் இந்த தொற்றுநோய் 20.7 கோடி மக்களை கூடுதலாக வறுமையில் தள்ள கூடுமென்றும், 2030ம் ஆண்டுக்குள் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பார்கள் என்றும் ஐநாவின் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-டிச-202022:54:58 IST Report Abuse
Vena Suna இதை ஐ.நா சொல்லனுமா? ஐ (நானே) சொல்றேன்...எனக்கு வேலை இல்லை ..அஞ்சு மாசமா..
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
08-டிச-202018:55:44 IST Report Abuse
Endrum Indian 1) வெறும் பயமுறுத்தல் தானா தீர்வு இல்லையா அப்புறம் என்னய்யா ஐ நா நீ வீதியில் போகும் ஒரு வேலையற்ற இளைஞன் கூட இதை சொல்லலாமே. 2) வெறும் கொரோனாவால் ஒருக்காலும் ஏழைகள் தோலை அதிகாமாகாது அதன் முக்கிய காரணம் 1) அரசியல் வியாதிகள் 2) முஸ்லீம் மதம் 3) ஐ எஸ் ஐ எஸ் . உலகில் உள்ள ஊழல் அரசியல் வியாதிகளை நொங்கு எடுங்கள் 100 கோடி 745 கோடி உலக மக்களும் மிக மிக பணக்காரகாலக முடியும். வெறும் சோனியாவை மடக்கினாலே ரூ 90 லட்சம் கோடி கிடைக்கும் இப்படி பலப்பல அரசியல் வியாதிகளை மடக்கினால் சர்வ சாதாரணமாக ரூ 745 கோடி கோடி கிடைக்கும் ஒவ்வுருவருக்கும் பிரித்துக்கொடுத்தால் உலகில் அனைவரும் கோடீஸ்வரனாக முடியும் மிக மிக சுலபமாக. இவர்கள் இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு 2 ரொட்டி சாப்பிட மூன்று மாத்திரை விழுங்குகின்றார்கள் அவ்வ்ளவு viy
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
08-டிச-202015:50:54 IST Report Abuse
Chakkaravarthi Sk நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் ஆனால் வறுமையில் பிறப்பது தவிர்க்க முடியாது. வறுமையில் உழல்வது வாழ்வது என்பது தனிப்பட்ட மனிதனுக்கும் பொறுப்பு உண்டு. அரசு எத்தனை லட்சம் கொடுத்தாலும் அதில் பெரும்பாலான தொகையை குடிப்பதற்கும் சினிமாவிற்கும் செலவு செய்தால் எப்படி வறுமை நீங்கும். மேலும் தானே உழைத்து செல்வம் சேர்ப்பவனுக்கு தான் தன்னிடம் உள்ள செல்வத்தை செலவு செய்யும் பொழுது அக்கறை இருக்கும். அரசு முயன்று எதை செய்தாலும் குறை சொல்வதே நமக்கு குறியாக உள்ளது. கல்வி, சுகாதாரம் போக்குவரத்து அஞ்சல் போன்ற வற்றை அரசு கவனிக்கும். தனிப்பட்ட மனித தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் காத்துக் கொள்ள முயல வேண்டும். என்னுடைய வறுமை என் முயற்சியால் குறைக்க முடியுமா என்று நினைத்தால் நன்றாக இருக்கும். எதெற்கெடுத்தாலும் நான் வோட்டை போட்டு அமர வைத்த அரசு எனக்கு சிக்கன் பிரியாணி கொடுக்க மாட்டேன் என்கிறது என்று குறை சொல்வது எளிது. நிச்சயம் கைவிடப்பட்டோர், குழந்தைகள் முதியோர் தீவிரமான நோய்வாய்ப்பட்டோர் போன்றோருக்கு அரசு உதவி தேவை. உழைக்க தகுதி உள்ளோர் நாட்டுக்கு எதாவது செய்து விட்டு பிறகு நாட்டிடம் எதிர்பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X