சென்னிமலை: சென்னிமலை, கிழக்கு புது வீதியில் உள்ள, சிவஞான சித்தர்கள் பீடம் உள்ளது. இங்கு, இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட நருமதை மருந்தீஸ்வரருக்கு, கார்த்திகை மாத நான்காவது சோமவாரமான நேற்று, சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, 220 அடி கொண்ட ருத்ராட்ச மாலை காப்பு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காப்பில் உள்ள ருத்ராட்சம், நாளை முதல் பிரசாதமாக வழங்கப்படும் என்று, சிவஞான சித்தர்கள் பீட தலைமை சித்தர் சரவணசித்தர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE