பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் ஓய்வெடுக்க 'பங்கர் பெட்': ஈரோடு மாவட்டத்தில் ஏற்பாடு

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஈரோடு: பணி முடிந்த போலீசார், போலீஸ் ஸ்டேஷனிலேயே ஓய்வெடுக்க, படுக்கை வசதி (பங்கர் பெட்) செய்யப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில், ஐந்து போலீஸ் சப்-டிவிஷன்களில், 40 போலீஸ் ஸ்டேஷன்களில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க, 24 மணி நேர ரோந்தில் ஈடுபடுகின்றனர். பணி முடிந்து சோர்வடையும் போலீசாருக்கு, ஸ்டேஷன்களில் ஓய்வறை உள்ளது. ஆனால், போதிய வசதி

ஈரோடு: பணி முடிந்த போலீசார், போலீஸ் ஸ்டேஷனிலேயே ஓய்வெடுக்க, படுக்கை வசதி (பங்கர் பெட்) செய்யப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில், ஐந்து போலீஸ் சப்-டிவிஷன்களில், 40 போலீஸ் ஸ்டேஷன்களில், 800க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க, 24 மணி நேர ரோந்தில் ஈடுபடுகின்றனர். பணி முடிந்து சோர்வடையும் போலீசாருக்கு, ஸ்டேஷன்களில் ஓய்வறை உள்ளது. ஆனால், போதிய வசதி இல்லாததால், ஓய்வெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த எஸ்.பி., தங்கதுரை, மாவட்டத்தில் அனைத்து ஸ்டேஷன்களிலும், படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கட்டில், பெட்டுடன் கூடிய படுக்கை வசதி (பங்கர் பெட்) செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி., தங்கதுரை கூறியதாவது: இந்த படுக்கை வசதி, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகுந்தாற்போல் இருக்கும். பணி முடிந்து வரும் போலீசார், இரவு ரோந்து முடித்து வரும் போலீசார், சில மணி நேரம் ஓய்வெடுக்க பயன்படுத்தி கொள்வர். பணி நேரத்தில் தலைவலி, உடல் வலி ஏற்பட்டால், ஸ்டேஷன் அதிகாரியிடம் அனுமதி பெற்று, சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளலாம். தற்போது, 21 ஸ்டேஷன்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஸ்டேஷன்களில், விரைவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X