பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை இந்தியா திட்டத்தில் பாதி சம்பளமே வழங்குவதாக புகார்

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஈரோடு: தூய்மை இந்தியா திட்டத்தில், பணி செய்வோருக்கு அரசு முழு சம்பளம் வழங்கியும், ஒப்பந்ததாரர்கள் பாதி அளவே சம்பளம் வழங்குவதாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று புகார் அளித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 'ஸ்கை மேன்பவர்' என்ற தனியார் ஒப்பந்ததாரர் மூலம், அனிமேட்டர், சூப்பர் வைசர், கோ ஆர்டினேட்டர் என்ற மூன்று பதவிகளில், 35 பேர் பணி

ஈரோடு: தூய்மை இந்தியா திட்டத்தில், பணி செய்வோருக்கு அரசு முழு சம்பளம் வழங்கியும், ஒப்பந்ததாரர்கள் பாதி அளவே சம்பளம் வழங்குவதாக, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று புகார் அளித்தனர்.


இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 'ஸ்கை மேன்பவர்' என்ற தனியார் ஒப்பந்ததாரர் மூலம், அனிமேட்டர், சூப்பர் வைசர், கோ ஆர்டினேட்டர் என்ற மூன்று பதவிகளில், 35 பேர் பணி புரிகின்றனர். மத்திய அரசு சம்பளம் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்ததாரர்கள் சம்பளம் தருகின்றனர். அனிமேட்டருக்கு அரசு வழங்கும், 15 ஆயிரத்து, 971 ரூபாயில், ஒப்பந்ததாரர், 6,500 ரூபாய், சூப்பர்வைசருக்கு, 21 ஆயிரத்து, 894 ரூபாயில், 10 ஆயிரம் ரூபாய், கோ ஆர்டினேட்டருக்கு, 23 ஆயிரத்து, 919 ரூபாயில், 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். அரசு எங்களுக்கு வழங்கும் ஊதியத்தில் பாதி கூட, சம்பளம் வழங்குவதில்லை. இத்தொகையை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் முதல், அனைவரும் பகிர்வதால், வாய் திறப்பதில்லை. எங்கள் வங்கி கணக்கில், சம்பளத்தை நேரடியாக வரவு வைத்து, அதை மத்திய, மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X