ஈரோடு: முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணைப்படை வீரர்கள் நலக்கூட்டமைப்பு சார்பில், ஈரோடு, காந்திஜி சாலை, ஜவான் பவன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மணி மண்டபம் கட்டும், 'புனர்ஜென்மம்' திட்டத்துக்கு, அரசு நிலம் ஒதுக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். வீட்டு வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு 'நீட்' தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவது போல, தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு, ஒரு கோடி ரூபாய், அவர்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE