பொது செய்தி

தமிழ்நாடு

நூற்பாலையை திறக்க போராட்டம்; 72 பேர் கைது

Added : டிச 08, 2020
Share
Advertisement
சேலம்: சேலம் நூற்பாலையை திறக்க, மீண்டும் போராட்டம் நடத்திய, 15 பெண் தொழிலாளர்கள் உள்பட, 72 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில், மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை திறக்க வலியுறுத்தி, கடந்த நவ.,9ல், போராட்டம் நடந்தது. தொடர்ந்து அதன் தொழிலாளர்கள், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று காலை, 11:00 மணியளவில் திரண்டனர். அதிகாரிகளுக்கு தண்டனை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலர் மோகன்ராஜ்

சேலம்: சேலம் நூற்பாலையை திறக்க, மீண்டும் போராட்டம் நடத்திய, 15 பெண் தொழிலாளர்கள் உள்பட, 72 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில், மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை திறக்க வலியுறுத்தி, கடந்த நவ.,9ல், போராட்டம் நடந்தது. தொடர்ந்து அதன் தொழிலாளர்கள், நாட்டாண்மை கழக கட்டடம் முன், நேற்று காலை, 11:00 மணியளவில் திரண்டனர். அதிகாரிகளுக்கு தண்டனை மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலர் மோகன்ராஜ் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடத்தினர். நூற்பாலையை மீண்டும் திறக்கவும், சி.பி.ஐ., விசாரித்து, முறைகேடு அதிகாரிகளுக்கு தண்டனை பெற்று தர வலியுறுத்தினர். அதன்பின், மோகன்ராஜ் கூறியதாவது: ஒட்டுமொத்த நெசவாளர்களால் துவங்கப்பட்ட, சேலம் கூட்டுறவு நூற்பாலை, சட்ட விரோதமாக மூடப்பட்டுவிட்டது. அதற்காக, 1988ல், பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து, போராடி வருகிறோம். நீதிமன்ற ஜப்தி நடவடிக்கையில் இருந்த நூற்பாலை சொத்துக்கள், எந்தவித அனுமதியின்றி, அரசுக்கும் தெரியப்படுத்தாமல், அவசர, அவசரமாக விற்பனை நடந்துள்ளது.


வாழ்வாதாரம் பாதிப்பு: எனவே, முறைகேடு விற்பனை செய்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். தொழிலாளர்கள், 16 ஆண்டாக வேலை இழந்து தவித்து வருகிறோம். இதுவரை, நிவாரணமும் கிடைக்காததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 15 பெண்கள் உள்பட, 72 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X