கெங்கவல்லி: கெங்கவல்லி ஒன்றிய, தி.மு.க., - காங்., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., மற்றும் விவசாயிகள் அமைப்புகள் நேற்று, கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மூட்டை மக்காச்சோளத்துக்கு, 2,000 ரூபாய் வழங்க வேண்டும் என, மக்காச்சோள பயிருடன் கோஷம் எழுப்பினர். பின்னர், கோரிக்கை மனுவை, கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்துவிடம் வழங்கினர். இந்நிலையில், தடையை மீறி ஊர்வலமாக சென்று, ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., நகர பொறுப்பாளர் பாலமுருகன் உட்பட ?? பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE