பொது செய்தி

தமிழ்நாடு

கொடிநாள் நிதி 19.22 சதவீதம் அதிகம்: சேலம் கலெக்டர் பெருமிதம்

Added : டிச 08, 2020
Share
Advertisement
சேலம்: ''இலக்கை தாண்டி, கொடிநாள் நிதி வசூலாகி உள்ளது,'' என, கலெக்டர் ராமன், கூறினார்.சேலம், கலெக்டர் அலுவலகத்தில், கொடிநாளையொட்டி, நேற்று உண்டியலில், கொடிநாள் நிதி வழங்கி, நிதி திரட்டும் பணியை, கலெக்டர் ராமன் துவக்கி வைத்தார். அதன்பின், அவர் கூறியதாவது: முப்படை வீரர்களின், மகத்தான சேவையை நினைவு கூற, ஆண்டுதோறும் டிச.,7ல், கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. போர் சார்ந்த

சேலம்: ''இலக்கை தாண்டி, கொடிநாள் நிதி வசூலாகி உள்ளது,'' என, கலெக்டர் ராமன், கூறினார்.

சேலம், கலெக்டர் அலுவலகத்தில், கொடிநாளையொட்டி, நேற்று உண்டியலில், கொடிநாள் நிதி வழங்கி, நிதி திரட்டும் பணியை, கலெக்டர் ராமன் துவக்கி வைத்தார். அதன்பின், அவர் கூறியதாவது: முப்படை வீரர்களின், மகத்தான சேவையை நினைவு கூற, ஆண்டுதோறும் டிச.,7ல், கொடிநாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. போர் சார்ந்த நடவடிக்கையில் வீர மரணம் அடைந்தவர்கள், ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு அளித்தல், ராணுவத்தினர் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு நல உதவிகள் வழங்கல். முன்னாள் படை வீரர்கள், அவர்களது குடும்பத்தை புனரமைத்தல் போன்றவைக்காக கொடிநாள் நிதி, திரட்டப்படுகிறது. மாவட்டத்தில், கடந்தாண்டு கொடிநாள் நிதி இலக்கு, ஒரு கோடியே, 57 லட்சத்து, 96 ஆயிரம் ரூபாய். ஆனால், ஒரு கோடியே, 88 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது, 19.22 சதவீதம் அதிகம். சென்ற ஆண்டு இலக்கு, இந்தாண்டுக்கும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் பிரபாகர் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X