சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனுடன் சென்ற பெண்ணின் ஒன்றரை பவுன் நகை பறிப்பு

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஓமலூர்: கணவருடன் சென்ற பெண்ணிடம் இருந்து, ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ஓமலூர் அருகே, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை, 45. ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் துணிக்கடை வைத்துள்ளார். மனைவி வளர்மதி, 43. கடந்த, 5ல், வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு, 7:00 மணிக்கு இருவரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

ஓமலூர்: கணவருடன் சென்ற பெண்ணிடம் இருந்து, ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


ஓமலூர் அருகே, கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அண்ணாத்துரை, 45. ஓமலூர் பஸ் ஸ்டாண்டில் துணிக்கடை வைத்துள்ளார். மனைவி வளர்மதி, 43. கடந்த, 5ல், வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு, 7:00 மணிக்கு இருவரும் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ஆர்.சி.,செட்டிப்பட்டி அருகே, வேகத்தடையில் மெதுவாக சென்ற போது, பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த, அடையாளம் தெரியாத மூன்று பேர், வளர்மதியின் கழுத்தில் இருந்த, நான்கு பவுன் தாலிக்கொடியை பறித்துள்ளனர். உடனே வளர்மதி, செயினை கையில் பிடித்த போது, பாதி செயினுடன் (ஒன்றரை பவுன்) வழிப்பறி கொள்ளையர்கள் தப்பினர். ஓமலூர் போலீசில், வளர்மதி அளித்த புகார்படி, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X