சேலம்: சேலம், மணியனூர் பருப்பு மில்லில், பீரோவின் பூட்டை உடைத்து, மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. சேலம், அன்னதானப்பட்டி, அகரம் காலனியை சேர்ந்தவர் லோகநாதன், 46. இவர், மணியனூர், நாட்டாமங்கலம் மெயின் ரோட்டில், ஸ்ரீதிருலட்சுமி என்ற பெயரில், பருப்பு மில் நடத்தி வருகிறார். கடந்த, 4ல், இரவு மில்லை பூட்டி விட்டுச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்தில், தெற்கு சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் யாஸ்மின், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE