சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் விடுதி சமையலர் பணி கேட்டு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

Added : டிச 08, 2020
Share
Advertisement
சேலம்: மீண்டும் விடுதி சமையலர் பணி கேட்டு, மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றார். ஆத்தூர் அடுத்த சாத்தப்பாடி, காட்டுக்கொட்டாய் வலவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மெய்யப்பன், 48. இவர் மனைவி அன்புசெல்வி, 40, மகன்கள் கபிலன், 16, பாரதி, 9, மகள் சசி, 13, ஆகியோருடன் மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென தன் மீது, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார்.

சேலம்: மீண்டும் விடுதி சமையலர் பணி கேட்டு, மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றார். ஆத்தூர் அடுத்த சாத்தப்பாடி, காட்டுக்கொட்டாய் வலவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மெய்யப்பன், 48. இவர் மனைவி அன்புசெல்வி, 40, மகன்கள் கபிலன், 16, பாரதி, 9, மகள் சசி, 13, ஆகியோருடன் மனு கொடுக்க, நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது, திடீரென தன் மீது, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி முதலுதவி செய்தனர். அதன்பின், டவுன் போலீசார் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், மெய்யப்பன் கூறியதாவது: ஆதிதிராவிடர் நல விடுதியில், 2016ல், பணியில் சேர்ந்து, 21 மாதம் சமையலராக பணியாற்றி வந்தேன். பின், முறையற்ற பணி நியமனம் எனக்கூறி, வேலையில் இருந்து என்னை நீக்கி விட்டனர். அதற்கு, நீதிமன்ற தடை உத்தரவு பெற்றும், இதுவரை பணியமர்த்தாமல், மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருகிறது. மூத்த மகன் கபிலன், மன வளர்ச்சி குன்றியவர். என் குடும்ப வறுமையை தெரிவித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், மன வேதனையில், தீக்குளிக்க வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையினர், மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X