சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது லாரி மோதி முதியவர் பலி

Added : டிச 08, 2020
Share
Advertisement
ஓமலூர்: கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய முதியவர், டிப்பர் லாரி மோதி பலியானார். ஓமலூர், சின்னபுதூர் தண்ணீர் கிணறுகாட்டை சேர்ந்தவர் கோபால், 60, விவசாயி. நேற்று முன்தினம் மாலை, 4:40 மணிக்கு கோபால், பஜாஜ் ஸ்பிரிட் மொபட் வாகனத்தில், சின்னாண்டிபட்டி காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி வரும் வழியில், காமலாபுரம் அருகே வந்த போது, தர்மபுரியிலிருந்து, சேலம்

ஓமலூர்: கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய முதியவர், டிப்பர் லாரி மோதி பலியானார். ஓமலூர், சின்னபுதூர் தண்ணீர் கிணறுகாட்டை சேர்ந்தவர் கோபால், 60, விவசாயி. நேற்று முன்தினம் மாலை, 4:40 மணிக்கு கோபால், பஜாஜ் ஸ்பிரிட் மொபட் வாகனத்தில், சின்னாண்டிபட்டி காளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு திரும்பி வரும் வழியில், காமலாபுரம் அருகே வந்த போது, தர்மபுரியிலிருந்து, சேலம் நோக்கி வந்த டிப்பர் லாரி, கோபால் மீது மோதியது. பலத்த காயமடைந்த கோபாலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கோபால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X