தர்மபுரி: தர்மபுரி கோட்டத்தை சேர்ந்த மக்கள், அஞ்சல் துறை சார்ந்த, தங்கள் குறைகளை வரும், 14க்குள் தெரிவிக்கலாம் என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி கோட்டத்திலுள்ள நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும், 21ல், தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தலைமையில் நடக்கிறது. அதில், நுகர்வோர் அஞ்சல் சார்ந்த, தங்கள் குறைகள், கோரிக்கை மற்றும் ஓய்வூதியர்களின் புகார்களை, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார் மனுக்களை, 'தர்மபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைதீர் கூட்டம்' என குறிப்பிட்டு, டிச., 14க்குள், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், தர்மபுரி அஞ்சல் கோட்டம், தர்மபுரி அஞ்சல், 636701 என்ற முகவரிக்கு, கிடைக்கும் வகையில், அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு, 04342- 269632, 260932 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE