தர்மபுரி: தர்மபுரியில், உலக மண்வள தினத்தை முன்னிட்டு, மண் பரிசோதனையின் அவசியம் குறித்து, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை முகாம் நடந்தது. தர்மபுரி, அன்னசாகரத்தில் நடந்த, உலக மண்வள தினத்தில், தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேன்மொழி தலைமை வகித்து பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்த மாவட்டத்தில் உள்ள மண் வளமாகும். மண் வளத்தின் அவசியம் மற்றும் அதை பாதுகாப்பது குறித்து, விவசாயிகள் அறிந்து விவசாயம் செய்ய வேண்டும். மேலும், இயற்கை விவசாயம் செய்வதன் மூலம், மண்ணின் வளத்தை எவ்வாறு நிலை நிறுத்தலாம் என்பது குறித்தும், அவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். விவசாயத்துக்கு தேவையான, தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், நிலையான வேளாண்மைக்கும், மண் வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மண் மாதிரி எடுத்தல், பிரச்னைக்குரிய மண் மாதிரிகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து, செயல்விளக்கம் அளிக்கப்பட்து. தர்மபுரி மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் ஜீவகலா, கிருஷ்ணாபுரம் வேளாண் அலுவலர் பூர்ணமதி மற்றும் உதவி வேளாண் அலுவலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE