பொது செய்தி

தமிழ்நாடு

4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய வரட்டாறு தடுப்பணை

Added : டிச 08, 2020
Share
Advertisement
அரூர்: தொடர் மழையால், நான்கு ஆண்டுகளுக்கு பின், வரட்டாறு தடுப்பணை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. இதற்கு, கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள சித்தேரி மலையிலிருந்து நீர்வரத்து உள்ளது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி,

அரூர்: தொடர் மழையால், நான்கு ஆண்டுகளுக்கு பின், வரட்டாறு தடுப்பணை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. இதற்கு, கிழக்கு தொடர்ச்சி மலையிலுள்ள சித்தேரி மலையிலிருந்து நீர்வரத்து உள்ளது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், 'புரெவி' புயலால், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், வரட்டாறு தடுப்பணைக்கு, நீர்வரத்து வர துவங்கியது. நேற்று முன்தினம் தடுப்பணையில், அதன் மொத்த கொள்ளளவான, 34.45 அடியில், 33.85 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. நேற்று வினாடிக்கு, 156 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால், அணை பாதுகாப்பு கருதி, வரத்தான, 156 கன அடி உபரிநீரும், பழைய ஆயக்கட்டு வழியாக, கீரைப்பட்டி பஞ்.,ல், உள்ள ஏரிகளுக்கு செல்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின், வரட்டாறு தடுப்பணை நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X